துன்பத்தில் இருந்து விடுபடுவதே நமது இலக்கு – கடவுளை “கண்டிப்பது” நமது குறிக்கோள் அல்ல!

Thiruchchikkaaran's Blog

ஒட்டு மொத்தமாகவும், எப்போதைக்குமாகவும் எல்லா வித துன்பங்களில் இருந்தும் விடுபடுவதே நமது இலக்கு.

இதை எழுதும்போது சில “கடவுள் ஆதரவாளர்கள்” வேகமாக வந்து, ” இன்பமும் துன்பமும் கலந்ததது தானே வாழ்க்கை , இவர்கள் துன்பத்தில் இருந்து முழுதுமாக விடுபடப் போகிறார்களாம் – வெள்ளைக் காக்காய் மல்லாக்க பறக்குது “ஹி ஹீ ஹோ”, என்று எக்காளமிட்டு கும்மி அடிப்பார்கள்.

இவர்களை பார்க்காத கடவுளுக்கு சாட்சி கொடுப்பதை போல ,  இல்லாத விடுதலையை (துன்பத்தில் இருந்து) அடைய போவதாக நாம் எண்ணுவதாக அவர்கள் கருதுகின்றனர்.

துன்பத்தில் இருந்து விடுபட எத்தனிப்பதே ஒவ்வொரு உயிரின் இயல்பு . ஒட்டு மொத்தமாக எல்லா துன்பங்களில் இருந்து ம் விடுதலை பெற முடியுமா , அது சாத்தியமா என்று சிந்திப்பதிலும் , அதற்க்கு முயற்சி செய்வதிலும் எந்த தவறும் இல்லை.

நிச்சயமாக முடியும் என்று நாம் சாட்சி கொடுக்கவில்லை, வழி இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்கிறோம்.

தமிழ் நாட்டு சித்தர்கள், வட நாட்டு முனிவர்கள், புத்தர், சங்கரர்… உள்ளிட்ட இந்தியாவின் தத்துவ அறிஞர்கள் அனைவரின் முக்கிய குறிக்கோளும் இந்த “துன்பத்தில் இருந்து ஒட்டு மொத்தமாக விடுபடுவது “என்பதையே இலக்காக கொண்டிருந்தது என்பதை ஆணித்தரமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.

Adi shankara

View original post